நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகிய 5 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
சபை அமர்வுகள் ஆரம்பமாகியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியது.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதுகுறித்து கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில், சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர முற்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ரம்புக்கனையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட வேண்டுமென தெரிவித்தார்.
இதனையடுத்து ஏற்பட்ட அமைதியின்னையைத் தொடர்ந்தே, சபை அமர்வுகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.