அதிகரித்து வரும் இறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான புதிய தொற்றுகள் இருந்தபோதிலும் ஷங்காய், அதன் கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கியுள்ளது.
மூடல்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் வணிகங்களும் குடியிருப்பாளர்களும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மிக மோசமான வைரஸ் தொற்றுப் பரவரை எதிர்கொண்ட ஷங்காய், கடந்த மாதம் முதல் அதன் 25 மில்லியன் மக்களை தங்கள் வீடுகளுக்குள் முடக்கி வைத்துள்ளது.
ஆனால் வேகமாக பரவும் ஓமிக்ரோன் மாறுபாட்டால் இயக்கப்படும் எழுச்சி, ஒரு தொற்றுநோயைத் தடுப்பதற்கான உத்தியோகபூர்வ முயற்சிகளை முறியடித்துள்ளது. மார்ச் முதல் 400,000 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
நகர அதிகாரிகள் புதன்கிழமை ஏழு கொவிட் -19 இறப்புகளையும் 18,000க்கும் மேற்பட்ட அறிகுறியற்ற புதிய தொற்றுகளையும் உறுதிப்படுத்தினர். அதே நேரத்தில் மேலும் நான்கு மில்லியன் மக்கள் முடக்கநிலையில் கடுமையான பதிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவித்தனர்.
சில தொழிற்சாலைகள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளன. மேலும் 12 மில்லியன் மக்கள் முன்பு தங்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களில் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த தளர்வுகள் சீரற்றதாக உள்ளது என்றும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பலர் தங்கள் வீட்டு வளாகங்களை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாக கூறுகின்றனர்.