இந்தியா பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை அடைவதற்கு பிரித்தானியா போதுமான ஆதரவை வழங்கும் என அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதி அளித்துள்ளார்.
இந்தியாவிற்கு அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியப்பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்டிருந்தனர்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த பொரிஸ் ஜோன்சன், ”இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் நிலவி வரும் நல்லுறவானது தற்போதைய காலக்கட்டத்தில் சிறப்பு மிக்கதாக உள்ளது.
உலக அளவில் சா்வாதிகாரப் போக்கு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவும் பிரித்தானியாவும், ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது அவசியமாக உள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு புதிய சவால்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அவற்றை எதிா்கொள்வதற்காக ஒருங்கிணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.