• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
உக்ரைன் வெள்ளைக் கொடியை ஏற்றுவதன் மூலம் சண்டை நிறுத்தத்தை தொடக்கிவைக்க வேண்டும்: ரஷ்யா!

Anoj by Anoj
2022/04/23
in உலகம்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைனின் மரியுபோல் நகரில் தங்களால் முற்றுகையிடப்பட்டுள்ள, அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கியுள்ள உக்ரைன் படையினார், வெள்ளைக் கொடியை ஏற்றுவதன் மூலம் சண்டை நிறுத்தத்தை தொடக்கிவைக்க வேண்டும் என ரஷ்யா கூறியுள்ளது.

ஆலையிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறியுள்ள ரஷ்யா, இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சக தேசியக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகயீல் மிஸின்ட்ஸெவ் கூறுகையில்,
‘முற்றுகையிடப்பட்டுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையைச் சுற்றிலும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். அந்த ஆலைக்குள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படும் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இந்த சண்டை நிறுத்ததை நாங்கள் மேற்கொள்வோம்.

ஆனால், அந்த ஆலையில் இருக்கும் உக்ரைன் படையினர் வெள்ளைக் கொடியை ஏற்றினால்தான் சண்டை நிறுத்தம் தொடங்கும். அஸோவ்ஸ்டல் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கள் பார்வைக்குத் தெரியும்படி எப்போது உக்ரைன் படையினர் வெள்ளைக் கொடி ஏற்றுகிறார்களோ, அப்போதிலிருந்து சண்டை நிறுத்தம் தொடங்கிவிடும்.

அதன்பிறகு உள்ளே இருப்பவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக, ரஷ்ய வீரர்களோ, ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினரோ தாக்குதல் நடத்தமாட்டார்கள். மரியுபோல் நகரில் மட்டும் 1,844 உக்ரைன் வீரர்கள் எங்களிடம் சரணடைந்துள்ளனர். 1.43 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குத் தேவையான தரமான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன’ என கூறினார்.

மரியுபோல் நகரை முற்றுகையிட்டு பல வாரங்களாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படையினர், நகரில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உக்ரைன் வீரர்களும் அவர்களுடன் இணைந்து சண்டையிட்டு வந்த சர்ச்சைக்குரிய அஸோவ் படையினரும் மரியுபோலில் உள்ள 10 கி.மீ. பரப்புடைய அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் பதுங்கி சண்டையிட்டு வருகின்றனர். அவர்களுடன் சுமார் 1,000 பொதுமக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அந்த ஆலைக்குள் அதிரடியாக நுழைந்து உக்ரைன் வீரர்களைக் கைது செய்யும் திட்டத்தை கைவிடுமாறும், ஆலையைச் சுற்றிலும் முற்றுகையைக் கடுமையாக்குமாறும் தனது படைக்கு உத்திரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைஉக்ரைன்மரியுபோல்ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சக தேசியக் கட்டுப்பாட்டு மையம்ரஷ்யப் படையினர்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம்: ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்பு

Next Post

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்தும் உதவும்!

Related Posts

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!
உலகம்

2026-01-25
இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !
அமொிக்கா

அமெரிக்க இராணுவத்தில் இணைகிறது எப் – 47 மிகவும் அபாயகரமான போர் விமானம்!

(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!
இங்கிலாந்து

கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!

இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல விரும்பும் கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் !

புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல்?

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்தும் உதவும்!

நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரிச் சட்டமூலம் தாக்கல்!

சட்டவிரோத பணப்புழக்கத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ளும் - நிர்மலா சீதாராமன்

உக்ரைன் தலைநகரிலுள்ள பிரித்தானிய தூதரகம் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும்: பிரதமர் பொரிஸ்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

0
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.