தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜுனியர் என்.டி.ஆர் காரின் Number வாங்குவதற்காக பல இலட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் பிரியரான இவர், பி.எம்.டபிள்யூ முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை கொள்வனவு செய்து வைத்துள்ளார். அந்த கார்களுக்கு தான் ராசியாக எண்ணும் 9999 என்ற சீரியல் எண்ணையே நம்பராக வாங்கி வைத்துள்ளாராம்.
அந்தவகையில் பி.எம்.டபிள்யூ. காருக்கு தன்னுடைய ராசியான எண்ணான 9999ஐக் வாங்க கிட்டதட்ட 11 இலட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


















