பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அற்புத லீலைகளை அனுபவித்த, ஐந்து குடும்பங்களின் கதைகளைக் கொண்ட தமிழ் திரைப்படம். “அனந்தா”
தைப்பொங்கல் தினத்தன்று ஐந்து இந்திய மொழிகளில், தென் இந்திய நடிகர்கள் வை. ஜி.மகேந்திரன் நிழல்கள் ரவி, சுஹாஷினி, ஜகபதிபாபு, அபிராமி, தலைவாசல் விஜய் பங்கு பற்றிய இத் திரைப்படம், பிரபல டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், இந்திய திரையரங்குகளில் வெளியானது.
இப் படத்தை, அதன் தயாரிப்பாளர் , சாயி பக்தர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி விஷேமாக, கொழும்பு சாயி நிலையத்தினூடாக, இலங்கை சாயி பக்தர்களுக்கு காட்சி படுத்த அற்பணித்துள்ளார்.
கொழும்பு, புது செட்டி தெருவிலுள்ள சாயி நிலையத்தில், எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு டிஜிட்டல் திரையில் அனைவருக்கும் இலவசமாக காண்பிக்கப்படவுள்ளது.
சாயி பக்தர், பிரபல தொழிலதிபர் திரு. எஸ். ரவீந்திரனின் அனுசரணையுடன் எற்பாடாகியுள்ளது.
















