ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வொன் டெர்லெயன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இந்தியா வந்துள்ள அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின்போது பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கத்தின் இழப்பு, எரிசக்தி மற்றும் டிஜிக்டல் பரிமாற்றம், பாதுகாப்பு, பொருளாதாரம், இலவச வர்த்தக ஒப்பந்தம், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள், ரஷ்யா-உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.