நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணை ஒன்றினை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அந்தவகையில் குறித்த பிரேரணையை கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கவுள்ளார்.
எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பிரேரணையை கொண்டு வருவதற்கான முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களும் ஜனாதிபதிக்கு எதிரான குற்ற பிரேரணை தொடர்பான முன்மொழிவுகளை தன்னிடம் வழங்கியதாக சுமந்திரன் தெரிவித்தார்.
இருப்பினும் குற்றப் பிரேரணையை கொண்டுவருவதிலும் அதனை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாக சுமந்திரன் தெரிவித்தார்.
ஆகவே அவர்கள் வழங்கிய முன்மொழிவுகளில் இருக்கும் முக்கிய விடயங்களை இணைத்து நம்பிக்கையிலாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அவர் மேலும் கூறினார்.