ஹொங்கொங்கில் தேசத்துரோக விடயங்களை வெளிப்படுத்திய பேராசிரியர் ஒருவரை அதிகாரிகள் அரசுக்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டின் பேரில், கைது செய்துள்ளனர்.
இது கல்வியாளர்களையும் பத்திரிகையாளர்களையும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்குவதோடு ஹொங்கொங் நகர அதிகாரிகள் எவ்வாறு எதிர்ப்புக் குரல்களைத் தொடர்ந்து தண்டிக்கின்றார்கள் என்பதும் வெளிப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் சீனப் பல்கலைக்கழகத்தின் இதழியல் பள்ளியில் விரிவுரையாளரும் ஆலோசகருமான 54 வயதான ஆலன் ஆவ் நகர அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற பிரச்சினைகளை வெளிப்படுத்திய எழுதிய ஆலன் ரி.வி.பி.நியூஸின் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
அவர் 2006இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நைட் ஃபெலோவாக இருந்தார். மேலும், அவர் மிங் பாவோ செய்தித்தாள் மற்றும் ஸ்டாண்ட் நியூஸ் ஆகியவற்றிற்கும் வர்ணனை வழங்கினார்.
அரசியல் மற்றும் சட்ட நிபுணரான எரிக் யான்-ஹோ லாய் கூறுகையில், ‘இந்த கைது ஒரு குழப்பமான செய்தியை அளிக்கிறது. வெளிப்படையாக கருத்து எழுதுபவர்கள் மற்றும் பொது விவாதத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் கல்வியாளர்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞை செய்கிறது’ என்றார்.
எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் இயக்கத்தின் கருத்துப்படி, ஹொங்கொங் அதிகாரிகள் பத்திரிக்கை சுதந்திரத்தை ஒழிப்பதில் உறுதியாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
அவ்வியக்கத்தின் கிழக்கு ஆசியப் பணியகத் தலைவர் செட்ரிக் அல்வியானி ஸ்டாண்ட் நியூஸில் இருந்து மூன்றாவது பத்திரிக்கையாளர் காவலில் வைக்கப்பட்டமையானது ஊடகங்கள் பலவந்தமாக முடக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, பத்திரிகை சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியைக் காட்டுகிறது’ என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
‘அரசுக்கு எதிரான குற்றங்கள்’ என்று கருதுவதைத் தண்டிக்க, தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் ஹொங்கொங் பயன்படுத்துவது ஊடகத்துறைக்கு மிகவும் ஆபத்தானதாக உஉள்ளது.
ஒரு காலத்தில் பத்திரிகை சுதந்திரத்தின் கோட்டையாக இருந்த ஹொங்கொங், 2002இல் 18ஆவது இடத்திலிருந்து 2020இல் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 80ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. சீன மக்கள் குடியரசு, அதன் பங்கிற்கு, 180இல் இருந்து 177ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.