நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் ஜூன்- ஜூலை மாதங்களில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் ஏழு வார இலங்கை சுற்றுப்பயணத்துக்கான அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் அவுஸ்ரேலிய அணியில், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பெட் கம்மின்ஸுக்கு ரி-20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த சுற்றுப்பயணத்தில், ஐபிஎல் காரணமாக பாகிஸ்தானின் வெள்ளைப் பந்து சுற்றுப்பயணத்தைத் தவறவிட்ட பெரும்பாலான வீரர்கள் மீண்டும் அணியின் இடம்பெற்றுள்ளனர்.
ஆரோன் பின்ச் தலைமையிலான ரி-20 அணியில், சீன் அபோட், ஆஷ்டன் அகர், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வோர்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆரோன் பின்ச் தலைமையிலான ஒருநாள் அணியில், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பெட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வோர்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெட் கம்மின்ஸ் தலைமையிலான டெஸ்ட் அணியில், ஆஷ்டன் அகர், ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வோர்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மார்கஸ் ஹாரிஸ் மற்றும் மார்க் ஸ்டெகெட்டி ஆகியோர் 16பேர் கொண்ட டெஸ்ட் அணியில் இல்லாதது குறிப்பிடத்தக்கது,
அதேபோல, கடந்த மாதம் பாகிஸ்தானில் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்த பென் மெக்டெர்மாட் மற்றும் மைக்கேல் நெசருக்கு இடமில்லை.
மனைவியுடன் தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கும் ஆடம் ஸாம்பா, முழு சுற்றுப்பயணத்தையும் தவறவிடுவார். முழுநேர தலைமைப் பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டின் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும்.
இரண்டு ஒரு நாள் மற்றும் இரண்டு முதல் தர போட்டிகளில் விளையாடும் ‘ஏ’ அணியில், சீன் அபோட், ஸ்கொட் போலண்ட், பீட் ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் போன்றோரும் இளம் வீரர்களான, தன்வீர் சங்கா மற்றும் ஆரோன் ஹார்டி போன்றோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு இந்த அளவிலான சுற்றுப்பயணம் சாத்தியப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
——————————————————————————————————————————————————————————–
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன்- ஜூலையில் இலங்கை செல்வதனை கிரிக்கெட் அவுஸ்ரேலியா உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, மூன்று ரி-20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன.
கொழும்பு, கண்டி மற்றும் காலி என மூன்று மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. டெஸ்ட் போட்டிகள் இரண்டும் காலி மைதானத்தில் நடைபெறுகின்றது.
ஜூன் 7ஆம் திகதி இத்தொடர் ஆரம்பமாகின்றது. முதலிரண்டு ரி-20 போட்டிகளும் கொழும்;பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகின்றது. மூன்றாவது ரி-20 போட்டி கண்டி- பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.
முதலிரண்டு ஒருநாள் போட்டிகள் கண்டி- பல்லேகல மைதானத்திலும், மீதமுள்ள மூன்று ஒருநாள் போட்டிகள், கொழும்;பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் நடைபெறுகின்றன.