கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் அறிவித்துள்ள முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை என தாய்வான் அறிவித்துள்ளது.
மேலும் குறித்த கட்டுப்பாடுகளை தாய்வான் பின்பற்றாது என்றும் பிரதமர் சு செங்-சாங் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல்களுடன் கொரோனா தொற்றினை முன்னர் தாய்வான் கட்டுப்படுத்தியிருந்தது.
இருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உள்நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாட்டால் சுமார் 75,000 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருப்பினும் சில கட்டுப்பாடுகளை தாய்வான் தளர்த்திவரும் நிலையில் அண்டை நாடான சீனா, இதற்கு மாறாக, ஷாங்காயில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் நேற்று கருது வெளியிட்டுள்ள தாய்வான் பிரதமர், சீனாவைப் போல தாம் கொடூரமாக நாட்டையும் நகரங்களையும் முடக்க மாட்டோம் என கூறியுள்ளார்.