பிரிமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவி மீண்டும் எம்.எஸ். டோனியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணியின் தலைவராக செயற்பட்டு வந்த சகலதுறை வீரர் ரவிந்திர ஜடேஜா மீண்டும் தலைவர் பொறுப்பை டோனியிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனை சென்னை சுப்பர் கிங் அணியும் உத்தியகப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ள நிலையில் ரசிகர்களும் கொண்டாடிவருகின்றனர்.
ரவிந்திர ஜடேஜா தலைமையில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.