2027 ஆம் ஆண்டு ஐ.பி.எல். (IPL) சீசனுக்கு முன்னதாக, இந்தியன் பிரீமியர் லீக் அணிகளால் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன மற்றும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க உள்ளிட்ட ஆறு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி பத்திரனவை விடுவித்துள்ளது, அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி ஹசரங்காவை கைவிட்டுவிட்டது.
டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி, இலங்கை வீரர்களான பத்தும் நிசங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகிய இருவரையும் விடுவித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, இலங்கை சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க ஆகியோரையும் விடுவித்துள்ளது.
இருப்பினும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியைச் சேர்ந்த தசுன் ஷனக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த இஷான் மலிங்க மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சேர்ந்த நுவான் துஷார ஆகிய இலங்கை வீரர்கள் மூவரும் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெறவில்லை.
இதிலிருந்து, அவர்கள் அந்தந்த அணிகளிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடும் இலங்கை வீரர்களுக்கு ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன; 2027-ஆம் ஆண்டு சீசன்குக முன்னதாக, பல முன்னணி இலங்கை வீரர்கள் மற்ற அணிகளால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
தங்கள் உரிமையாளர் அணிகளால் விடுவிக்கப்படும் வீரர்கள், தகுதி மற்றும் பதிவு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு பெறுவார்கள்.
வெளியான இந்தத் தகவல்கள், அனைத்து 10 அணிகளும் சமர்ப்பித்த அதிகாரப்பூர்வமாகத் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலுடன் இன்னும் முழுமையாகச் சரிபார்க்கப்படவில்லை.















