2027 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக, அணிகள் தங்களது வீரர்களைத் தக்கவைத்தல் மற்றும் விடுவித்தல் தொடர்பான முடிவுகளை இன்று (17) அறிவிக்கவுள்ளன.
டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தை முன்னிட்டு, ஏற்கனவே ஐ.பி.எல். அணிகளுக்கிடையிலான வீரர்கள் பரிமாற்ற நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
ஐரோப்பிய கால்பந்தில் இடம்பெறும் கோடைகால வீரர்கள் பரிமாற்றக் காலத்தைப் போன்றே இந்த நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.
ஏலத்திற்கு முன்னதாகவே ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் புதிய அணிகளுக்கு மாறியுள்ளனர்.
அதேவேளை, ரிஷப் பந்த் மீண்டும் டெல்லி கெபிடல்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளதுடன், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பரிமாற்றத் தெரிவுகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
எனினும், வீரர்கள் பரிமாற்ற நடவடிக்கைகளுக்கான காலப்பகுதி இன்னும் நிறைவடையவில்லை.
இதனால், இன்றைய வீரர்கள் தக்கவைப்பு தினத்தில் மேலும் சில முக்கிய மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மொஹமட் ஷமி, சாம் கரன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் எதிர்காலம் தொடர்பில் இன்னும் உறுதியான முடிவுகள் வெளியாகாத நிலையில், இவர்கள் குறித்த அணிகளின் தீர்மானங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.இந்நிலையில், நவம்பர் 17ஆம் திகதியான இன்று ஒவ்வொரு ஐ.பி.எல். அணியும் எந்த வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும், யாரை அணியிலிருந்து விடுவிக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
எம்.எஸ். தோனி தொடர்ந்து விளையாடுவாரா அல்லது ஓய்வை அறிவிப்பாரா என்பதே வீரர்கள் தக்கவைப்பு தினத்தில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
இந்தக் கேள்விக்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கும் நிலையில், முன்னாள் இந்திய அணித் தலைவரான தோனி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம்பெறுவதுடன், புதிய அணி நிர்வாகத்தின் கீழ் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோரை வீரர்கள் பரிமாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் இணைத்துள்ளது.
இதனால், எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் தரமான பந்துவீச்சாளர்களைக் கொள்வனவு செய்வதில் சென்னை அணி அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலத்திற்கான பண இருப்பை அதிகரிக்கும் நோக்கில், 14.2 கோடி ரூபாய்க்கு அணியில் இணைக்கப்பட்ட பிரசாந்த் வீரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அணியில் மேலதிக இடங்களை உருவாக்கும் வகையில் மாட் ஷோர்ட், மாட் ஹென்றி மற்றும் ஸ்பென்சர் ஜோன்சன் ஆகிய வீரர்களையும் அணியிலிருந்து விடுவிக்க அந்த அணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
- டிவால்ட் பிரெவிஸ்
- ருதுராஜ் கெய்க்வாட்
- சஞ்சு சாம்சன்
- எம்.எஸ். தோனி
- சிவம் துபே
- உர்வில் பட்டேல்
- அன்ஷுல் கம்போஜ்
- ஜேமி ஓவர்டன்
- நூர் அஹ்மத்
- கார்த்திக் சர்மா
- ஆயுஷ் மாத்ரே
- முகேஷ் சௌத்ரி
- குர்ஜப்நீத் சிங்
- சர்பராஸ் கான்
- ராமகிருஷ்ண கோஷ்
- அகீல் ஹொசைன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்
- அமான் கான்
- மெட் ஷோர்ட்
- ராகுல் சஹார்
- மெட் ஹென்றி
- ஸ்பென்சர் ஜோன்சன்
- ஆகாஷ் மத்வால்
- குல்தீப் யாதவ்
- டியான் ஃபோரெஸ்டர்
- ஷ்ரேயஸ் கோபால்
- சாக் ஃபோக்ஸ்
- மெக்னீல் நோரோனா
- பிரசாந்த் வீர்
மொத்தம்:
- தக்கவைக்கப்பட்ட வீரர்கள் – 16
- விடுவிக்கப்பட்ட வீரர்கள் – 12
வர்த்தகம் மூலம் இணைந்த வீரர்கள்
- லியாம் லிவிங்ஸ்டோன்
- ஜாக் எட்வர்ட்ஸ்
டெல்லி கேபிட்டல்ஸ்
கடந்த ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தைச் சந்தித்திருந்தாலும், அடுத்த தொடரில் அணியின் முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்கமைய, ரிஷப் பந்தை மீண்டும் அணியில் இணைத்துள்ளதுடன், அக்சர் பட்டேல் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோரை அணியிலிருந்து விடுவிக்கப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், அணியின் சுழற்பந்து வீச்சுப் பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ஜீஷன் அன்சாரியைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதேவேளை, தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜனை அணியிலிருந்து விடுவித்துள்ளது.
இதற்கிடையில், மிட்செல் ஸ்டார்க் மற்றும் அவ்கிப் நபி ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்படக்கூடிய முக்கிய வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.
அவுஸ்திரேலிய அணிக்கு அடுத்துவரும் காலங்களில் முக்கிய சர்வதேசப் போட்டிகள் இருப்பதால், மிட்செல் ஸ்டார்க் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பது சந்தேகத்திற்குரியதாகியுள்ளது.
அதேபோன்று, நியூசிலாந்து தொடரில் சிறப்பாகச் செயற்பட்ட அவ்கிப் நபி, கடந்த ஐ.பி.எல். தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.
மேலும், ரிஷப் பந்த் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், களத்துக்கு வெளியிலான சர்ச்சைகளும் காரணமாக அபிஷேக் போரெல் அணியிலிருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் – தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
-
டேவிட் மில்லர்
-
சாஹில் பராக்
-
கே.எல். ராகுல்
-
சமீர் ரிஸ்வி
-
அஷுதோஷ் சர்மா
-
பிரித்வி ஷா
-
பதும் நிஸ்ஸங்க
-
டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
-
மாதவ் திவாரி
-
துஷ்மந்த சமீர
-
கைல் ஜேமிசன்
-
முகேஷ் குமார்
-
லுங்கி நிகிடி
-
விப்ராஜ் நிகம்
-
அக்சர் பட்டேல்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்
-
ரெஹான் அஹ்மத்
-
பென் டக்கெட்
-
கருண் நாயர்
-
நிதிஷ் ராணா
-
அவ்கிப் நபி
-
மிட்செல் ஸ்டார்க்
-
திருபுரானா விஜய்
-
அஜய் மண்டல்
-
அபிஷேக் போரெல்
வர்த்தகம் மூலம் அணியில் இணைந்த வீரர்கள்
-
ரிஷப் பந்த்
-
ஜீஷன் அன்சாரி
மொத்த வீரர்கள் விபரம்:
-
தக்கவைக்கப்பட்டவர்கள் – 15
-
விடுவிக்கப்பட்டவர்கள் – 9
-
வர்த்தகம் மூலம் இணைந்தவர்கள் – 2
குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரையில், எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிராருக்கு அதிக வாய்ப்புகளை வழங்க அந்த அணி திட்டமிட்டுள்ளது.
இந்திய அணிக்காக விளையாடியபோது தனது திறமையை வெளிப்படுத்தியுள்ள அவர், எதிர்வரும் தொடரில் சிறப்பாகச் செயற்படத் தயாராக உள்ளார். இதனால், இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் அணியிலிருந்து விடுவிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிராஜ் அண்மைக்காலமாக இந்தியாவின் டி:20 சர்வதேச அணியில் இடம்பெறவில்லை. மேலும், 11.2 கோடி ரூபாய் ஊதியத்தில் அவரை மாற்று வீரராக வைத்திருப்பது அணிக்கு அதிக செலவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவரை விடுவிப்பது குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணி பரிசீலிக்கலாம்.
அதேவேளை, அணியில் வீரர்களுக்கான இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ள நிலையில், அசோக் சர்மா மற்றும் மானவ் சுதார் ஆகியோரையும் அணியிலிருந்து விடுவிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மறுபுறம், அண்மையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் பிலிப்ஸுக்கும் அணியில் இடம் கிடைப்பது உறுதியில்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்களுக்கான நான்கு இடங்களையும் ஜேசன் ஹோல்டர், ககிசோ ரபாடா, ஜொஸ் பட்லர் மற்றும் ரஷித் கான் ஆகியோர் கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கிளென் பிலிப்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் – தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
-
சுப்மன் கில்
-
சாய் சுதர்ஷன்
-
ராகுல் தெவாட்டியா
-
அர்ஷத் கான்
-
குர்னூர் பிரார்
-
பிரசித் கிருஷ்ணா
-
ககிசோ ரபாடா
-
ரஷித் கான்
-
சாய் கிஷோர்
-
ஜேசன் ஹோல்டர்
-
வாஷிங்டன் சுந்தர்
-
ஜொஸ் பட்லர்
-
குமார் குஷாக்ரா
குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்
-
டொம் பென்டன்
-
ஷாருக் கான்
-
நிஷாந்த் சிந்து
-
குல்வந்த் கெஜ்ரோலியா
-
பிருத்விராஜ் யாரா
-
அசோக் சர்மா
-
இஷாந்த் சர்மா
-
மானவ் சுதார்
-
லூக் வூட்
-
ஜெயந்த் யாதவ்
-
கொனர் எஸ்டர்ஹுய்சன்
-
அனுஜ் ராவத்
-
கிளென் பிலிப்ஸ்
-
மொஹமட் சிராஜ்
மொத்த வீரர்கள் விபரம்:
-
தக்கவைக்கப்பட்டவர்கள் – 13
-
விடுவிக்கப்பட்டவர்கள் – 14
-
மொத்தம் – 27
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கடந்த ஆண்டு வீரர்கள் ஏலத்தில் அதிகளவிலான பணத்தைச் செலவிட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அந்த முதலீட்டுக்கு ஏற்ற வகையில் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றத்தைப் பதிவு செய்யத் தவறியது.
குறிப்பாக, தொடரின் முதல் ஏழு போட்டிகளிலும் அந்த அணி எந்தவொரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை. இறுதிக்கட்டத்தில் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அது அணியின் நிலையை மாற்றுவதற்குப் போதுமானதாக அமையவில்லை.
இதனால், எதிர்வரும் ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக அணியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது. அத்துடன், புதிய அணித் தலைவரையும் தெரிவுசெய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அணியில் இணைப்பதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அவரை அணியில் இணைப்பதற்கு ஏலத்தில் கணிசமான தொகையைச் செலவிட வேண்டியிருக்கும் என்பதால், கடந்த ஆண்டு ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கெமரூன் கிரீன் மற்றும் மதீஷ பத்திரண ஆகியோரை அணியிலிருந்து விடுவிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட முஸ்தபிசூர் ரஹ்மானையும் கொல்கத்தா அணி விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) உத்தரவு காரணமாக, 2026ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் முஸ்தபிசூர் ரஹ்மான் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
-
ஃபின் அலன்
-
மணீஷ் பாண்டே
-
ரோவ்மன் பவல்
-
அங்கிரிஷ் ரகுவன்ஷி
-
ரிங்கு சிங்
-
சார்தக் ரஞ்சன்
-
வருண் சக்கரவர்த்தி
-
சௌரப் துபே
-
சுனில் நரைன்
-
ஹர்ஷித் ராணா
-
கார்த்திக் தியாகி
-
அனுகுல் ராய்
-
டிம் செய்ஃபர்ட்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்
-
அஜிங்க்யா ரஹானே
-
கெமரூன் கிரீன்
-
ராகுல் திரிபாதி
-
ரமன்தீப் சிங்
-
தக்ஷ் கம்ரா
-
வைபவ் அரோரா
-
ஆகாஷ் தீப்
-
முஸ்தபிசூர் ரஹ்மான்
-
பிளெஸ்ஸிங் முசரபானி
-
மதீஷ பத்திரண
-
நவ்தீப் சைனி
-
பிரசாந்த் சோலங்கி
-
உம்ரான் மாலிக்
-
ரச்சின் ரவீந்திரா
-
தேஜஸ்வி தஹியா
-
லுவ்னித் சிசோடியா
மொத்த வீரர்கள் விபரம்:
-
தக்கவைக்கப்பட்டவர்கள் – 13
-
விடுவிக்கப்பட்டவர்கள் – 16
-
மொத்தம் – 29
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முன்னாள் அணித் தலைவர் ரிஷப் பந்த் அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் முன்னணி வீரர்கள் பலர் அணியில் இடம்பெற்றுள்ளதால், லக்னோ அணியின் பந்துவீச்சுப் பலம் வலுவடைந்துள்ளது.
இருப்பினும், மேலும் சில வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்காக அணியில் இடங்களை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நிக்கோலஸ் பூரன் கடந்த முறை 21 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டிருந்த போதிலும், எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படவில்லை.
அதேவேளை, ஜோஷ் இங்கிலிஸின் சிறப்பான ஆட்டத்திறனைக் கருத்திற்கொண்டு, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளரான பூரனை அணியிலிருந்து விடுவிக்க லக்னோ நிர்வாகம் தீர்மானிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மொஹமட் ஷமி லக்னோ அணியிலிருந்து வெளியேறி, அவருக்குப் பதிலாக சாம் கரன் அணியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
-
ஆயுஷ் படோனி
-
முகுல் சௌத்ரி
-
எய்டன் மார்க்ரம்
-
மிட்செல் மார்ஷ்
-
ஹிம்மத் சிங்
-
ஆவேஷ் கான்
-
மொஹ்சின் கான்
-
திக்வேஷ் ரதி
-
ஆகாஷ் சிங்
-
மயங்க் யாதவ்
-
பிரின்ஸ் யாதவ்
-
வனிந்து ஹசரங்க
-
ஷாபாஸ் அஹ்மட்
-
ஜோஷ் இங்கிலிஸ்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்
-
மத்தியூ பிரீட்ஸ்கே
-
அர்ஷின் குல்கர்னி
-
அக்ஷத் ரகுவன்ஷி
-
அப்துல் சமத்
-
அன்ரிச் நோர்ட்ஜே
-
அர்ஜுன் டெண்டுல்கர்
-
நமன் திவாரி
-
ஜோர்ஜ் லிண்டே
-
நிக்கோலஸ் பூரன்
மொத்த வீரர்கள் விபரம்:
-
தக்கவைக்கப்பட்டவர்கள் – 14
-
விடுவிக்கப்பட்டவர்கள் – 09
-
வர்த்தகம் மூலம் இணைந்தவர்கள்– 01
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை அணியிலிருந்து விடுவித்துள்ளதுடன், தனது பந்துவீச்சுப் பிரிவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அர்ஷ்தீப் சிங்கை அணியில் இணைத்துள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட்டையும் மும்பை அணி விடுவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைக்காலமாக அவரது பந்துவீச்சுத் திறன் குறைந்துள்ளமையே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, தீபக் சாஹரின் ஆட்டத்திறனும் அண்மைக்காலமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதற்கிடையில், அஷ்வனி குமார் சிறப்பாக வளர்ந்து வருவதால், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான தீபக் சாஹரையும் அணியிலிருந்து விடுவிக்க மும்பை நிர்வாகம் தீர்மானிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
மும்பை இந்தியன் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
-
ரோஹித் சர்மா
-
சூர்யகுமார் யாதவ்
-
திலக் வர்மா
-
ஜஸ்பிரித் பும்ரா
-
நமன் தீர்
-
வில் ஜாக்ஸ்
-
ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்
-
அல்லா கஸன்ஃபர்
-
அஷ்வனி குமார்
-
கோர்பின் போஷ்
-
மிட்செல் சான்ட்னர்
-
ரியான் ரிக்கல்டன்
-
குவின்டன் டி கொக்
- ரகு சர்மா
-
-
மும்பை இந்தியன் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்
-
ருசித் அஹிர்
-
அதர்வா அன்கோலேகர்
-
கிரிஷ் பகத்
-
மஹிபால் லோம்ரோர்
-
டேனிஷ் மலேவர்
-
ரொபின் மின்ஸ்
-
மயங்க் ராவத்
-
டிரென்ட் போல்ட்
-
தீபக் சாஹர்
-
மொஹமட் இஷார்
-
கேஷவ் மகராஜ்
-
மயங்க் மார்க்கண்டே
-
ஷர்துல் தாக்கூர்
-
ராஜ் அங்கத் பாவா
மொத்த வீரர்கள் விபரம்:
-
தக்கவைக்கப்பட்டவர்கள் – 14
-
விடுவிக்கப்பட்டவர்கள் – 14
-
வர்த்தகம் மூலம் இணைந்தவர்கள்– 01
-
பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை வர்த்தகம் மூலம் இணைத்துள்ளதன் ஊடாக தனது அணியின் நட்சத்திர வீரர்களின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றும் முனைப்புடன் அந்த அணி களமிறங்கத் தயாராகி வருகிறது.
அர்ஷ்தீப் சிங் அணியிலிருந்து வெளியேறுவது பஞ்சாப் அணிக்குப் பின்னடைவாக அமையலாம். எனினும், மார்கோ யான்சன் சிறப்பாகச் செயல்படுவார் என அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
அதேவேளை, ஹர்திக் பாண்டியா அணியில் இணைந்துள்ளதுடன், அஸ்மத்துல்லா உமர்சாயும் வாய்ப்புக்காகக் காத்திருப்பதால், மார்கஸ் ஸ்டொய்னிஸை அணியிலிருந்து விடுவிக்க பஞ்சாப் அணி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
-
பிரியன்ஷ் ஆர்யா
-
கூப்பர் கானொலி
-
ஸ்ரேயாஸ் ஐயர்
-
சூர்யான்ஷ் ஷெட்ஜ்
-
ஷஷாங்க் சிங்
-
நேஹால் வதேரா
-
பிரப்சிம்ரன் சிங்
-
மார்கோ யான்சன்
-
அஸ்மத்துல்லா உமர்சாய்
-
விஜய்குமார் வைஷாக்
-
யாஷ் தாக்கூர்
-
யுஸ்வேந்திர சஹால்
-
ஹர்பிரீத் பிரார்
-
சேவியர் பார்ட்லெட்
பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்
-
பிரவீன் டுபே
-
முஷீர் கான்
-
மிட்செல் ஓவன்
-
அவினாஷ் பைலா
-
ஹர்னூர் சிங்
-
மார்கஸ் ஸ்டொய்னிஸ்
-
விஷ்ணு வினோத்
-
பென் ட்வார்ஷுயிஸ்
-
லாக்கி பெர்குசன்
-
விஷால் நிஷாத்
மொத்த வீரர்கள் விபரம்:
-
தக்கவைக்கப்பட்டவர்கள் – 14
-
விடுவிக்கப்பட்டவர்கள் – 10
-
வர்த்தகம் மூலம் இணைந்தவர்கள்– 01
ராஸ்தான் ரோயல்ஸ்
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு மாறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே ராஜஸ்தான் அணியின் வீரர்கள் தக்கவைப்பு நடவடிக்கையில் முக்கிய விடயமாகக் கருதப்படுகிறது.
இந்த வர்த்தக ஒப்பந்தம் கைகூடாவிட்டால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் தக்கவைக்கப்பட்டு, அடுத்த சீசனிலும் அணியின் முக்கிய வீரராகத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சீசனில் ராஜஸ்தான் அணியின் தலைவராக ரியான் பராக் தொடர்ந்து செயல்படவுள்ளார். இதனால், சில முன்னணி வீரர்களை அணியிலிருந்து விடுவிக்க அந்த அணி தயாராகி வருகிறது. மொஹமட் ஷமி அடுத்த சீசனிலும் ராஜஸ்தான் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ரவி பிஷ்னோய்க்குப் பதிலாக யஷ் ராஜ் பூன்ஜா அணியில் இடம்பெற்றுள்ளதால், ரவி பிஷ்னோய் அணியிலிருந்து வெளியேறக்கூடும் எனக் கூறப்படுகிறது.
அடிக்கடி காயங்களுக்கு உள்ளாகி வரும் நந்த்ரே பேர்கரும் அணியிலிருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், அணியின் ஏலத் தொகையை அதிகரிக்கும் நோக்கில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் சந்தீப் சர்மா ஆகியோரையும் விடுவிக்க ராஜஸ்தான் நிர்வாகம் பரிசீலிக்கலாம்.
சாம் கரன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு மாறுவது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிட்டாலும், அவர் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
-
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
-
ஷிம்ரோன் ஹெட்மயர்
-
டொனோவன் பெரேரா
-
விக்னேஷ் புதூர்
-
யஷ் ராஜ் பூன்ஜா
-
லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்
-
வைபவ் சூர்யவன்ஷி
-
ஜோஃப்ரா ஆர்ச்சர்
-
சுஷாந்த் மிஸ்ரா
-
பிரிஜேஷ் சர்மா
-
ரியான் பராக்
-
ரவீந்திர ஜடேஜா
-
துருவ் ஜூரெல்
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்
-
சுபம் டுபே
-
அமன் ராவ்
-
ரவி சிங்
-
தசுன் ஷானக
-
ரவி பிஷ்னோய்
-
யுத்வீர் சிங்
-
நந்த்ரே பேர்கர்
-
துஷார் தேஷ்பாண்டே
-
குவேனா மபாகா
-
ஆடம் மில்னே
-
சந்தீப் சர்மா
-
குல்தீப் சென்
-
சாம் கரன்
-
இமான்ஜோத் சிங் சாஹல்
மொத்த வீரர்கள் விபரம்:
-
தக்கவைக்கப்பட்டவர்கள் – 13
-
விடுவிக்கப்பட்டவர்கள் – 14
-
வர்த்தகம் மூலம் இணைந்தவர்கள்– 01
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
நடப்புச் சம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பெரியளவிலான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதனால், அணியில் வாய்ப்புக் குறைவாகப் பெற்ற வீரர்களையே பெரும்பாலும் விடுவிக்க அந்த அணி திட்டமிட்டுள்ளது. எனினும், இங்கிலாந்து சகலதுறை வீரரான ஜேக்கப் பெத்தலின் எதிர்காலம் கவனிக்கத்தக்கதாக இருக்கும்.
ஜேக்கப் பெத்தலுக்கு இங்கிலாந்து அணிக்காக எதிர்வரும் கோடைகாலத்தில் அதிகளவிலான போட்டிகள் உள்ளதுடன், RCB அணியின் விளையாடும் பதினொருவர் குழுவிலும் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
அதேவேளை, ஜோஷ் ஹேசல்வூட்டின் பங்கேற்பு குறித்த சந்தேகம் நிலவுகின்ற போதிலும், அவரைத் தக்கவைத்துக்கொள்ள RCB அணி விரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தக்கவைக்கப்பட்டவர்கள்
-
விராட் கோலி
-
ரஜத் படிதார்
-
டிம் டேவிட்
-
பில் சோல்ட்
-
வெங்கடேஷ் ஐயர்
-
தேவ்தத் படிக்கல்
-
ரசிக் சலாம்
-
ஜேக்கப் டஃபி
-
ஜோஷ் ஹேசல்வூட்
-
சுயாஷ் சர்மா
-
புவனேஷ்வர் குமார்
-
க்ருணால் பாண்டியா
-
ரொமாரியோ ஷெப்பர்ட்
-
ஜிதேஷ் சர்மா
ரோயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள்
-
ஜேக்கப் பெத்தல்
-
ஜோர்டன் காக்ஸ்
-
விஹான் மல்ஹோத்ரா
-
ஸ்வப்னில் சிங்
-
கனிஷ்க் சௌஹான்
-
யாஷ் தயாள்
-
சத்விக் தேஸ்வால்
-
ரிச்சர்ட் க்ளீசன்
-
விக்கி ஓஸ்ட்வால்
-
அபினந்தன் சிங்
-
நுவான் துஷாரா
-
மங்கேஷ் யாதவ்
மொத்த வீரர்கள் விபரம்:
-
தக்கவைக்கப்பட்டவர்கள் – 14
-
விடுவிக்கப்பட்டவர்கள் – 12
-
வர்த்தகம் மூலம் இணைந்தவர்கள்– 01
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
நேதன் எல்லிஸ் மற்றும் கலீல் அஹமட் ஆகியோரை அணியில் இணைத்ததன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது பந்துவீச்சுப் பிரிவை வலுப்படுத்தியுள்ளது. அதேவேளை, நடராஜனையும் மீண்டும் அணிக்குக் கொண்டுவந்துள்ளது.
இதனால், அணியில் வாய்ப்புக் குறைவாகப் பெற்ற வீரர்களை விடுவிப்பதில் SRH அணி கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய நட்சத்திர வீரர்கள் எவரும் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தக்கவைக்கப்பட்டவர்கள்
-
அபிஷேக் சர்மா
-
டிராவிஸ் ஹெட்
-
சிவாங் குமார்
-
அனிகேத் வர்மா
-
பட் கம்மின்ஸ்
-
ஈஷான் மலிங்கா
-
ஹர்ஷ் டுபே
-
பிரஃபுல் ஹிங்கே
-
சாகிப் ஹுசைன்
-
பிரைடன் கார்ஸ்
-
நிதிஷ் குமார் ரெட்டி
-
ஹென்ரிச் கிளாசென்
-
இஷான் கிஷன்
-
சலில் அரோரா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள்
-
ஆர்.எஸ். அம்பிரீஷ்
-
ரவிச்சந்திரன் ஸ்மரன்
-
கமிந்து மெண்டிஸ்
-
ஜெரால்ட் கோட்ஸி
-
கிரைன்ஸ் ஃபுலேத்ரா
-
அமித் குமார்
-
தில்ஷான் மதுஷங்க
-
டேவிட் பெய்ன்
-
ஹர்ஷல் படேல்
-
சிவம் மாவி
-
ஜெய்தேவ் உனத்கட்
-
ஓங்கார் தர்மலே
SRH அணியின் பரிமாற்றங்கள் (Trades)
-
கலீல் அஹமட்
-
நேதன் எல்லிஸ்
-
டி. நடராஜன்

















