இந்தியா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, ஷாங்காய் (Shanghai) ஒத்துழைப்பு அமைப்பின் கலாசார மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை புதுடில்லியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், பாகிஸ்தான் சார்பில் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் (Musadik Malik) பங்கேற்கவுள்ளார்.
எனினும், பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளமை அந்நாட்டு அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற பஹல்காம் (Pahalgam) பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், இந்தியாவின் இந்த நிலைப்பாடு ஏன் மாற்றமடைந்துள்ளது என காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேவேளை, பயங்கரவாதத்தை கைவிட்டு இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது பாகிஸ்தானுக்கே நன்மை பயக்கும் என ஆளும் பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

















