பிரித்தானியாவில் உணவுக்குழாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான புதிய பரிசோதனை முறையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, உணவு விழுங்குவதில் சிரமம் மற்றும் நீண்டகால அஜீரணப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்தப் பரிசோதனை உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனையை, குடும்ப மருத்துவ நிலையங்களிலும் அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்படுகிறது.
இதன் மூலம் நோயாளிகள் விரைவாகப் பரிசோதனை செய்து கொள்வதுடன், புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வாய்ப்பும் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தப் புதிய திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் புற்றுநோய் சிகிச்சையைத் தாமதமின்றி ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















