ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏற்றவாறு சட்டங்கள் உருவாக்கப்படுவது கவலைக்குரியது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பரிசுத்த பாப்பரசரை சந்தித்ததன் பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ள கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது தலைவர்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மகாநாயக்க தேரர்கள் கூறும் விடயத்தை நிராகரிப்பது நல்லதல்ல எனவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், சரியானவற்றை செய்து பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பது தலைவர்களின் கடமை எனவும் பேராயர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏற்றவாறு சட்டங்கள் உருவாக்கப்படுவது கவலைக்குரியது. சட்டம் அவர்களுக்கு மேலாக இருக்க வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் குறிப்பிட்டுள்ளார்.