நேட்டோவுடன் இணைந்து பணியாற்றிய பிறகு, தலிபான்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான உறுதிமொழியை பிரித்தானியா வழங்கவில்லை என ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய பிரித்தானிய ஜெனரல் சர் ஜொன் மெக்கால் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு வர தகுதியான நூற்றுக்கணக்கானோர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு நாங்கள் உறுதியளித்தோம், நீங்கள் ஒரு உறுதிமொழியைச் செய்தீர்கள், நீங்கள் அதை வழங்கவில்லை, எனவே அதை வழங்குவதற்கான ஒரு அமைப்பை உருவாக்குங்கள்’ என கூறினார்.
இதுவரை 9,000க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
20,000 ஆப்கானிஸ்தான் பிரஜைகள் பிரித்தானியாவில் மீள்குடியேற பாதுகாப்பான பாதை வழங்கப்படும் என்று உட்துறை அலுவலகம் முன்பு கூறியமை குறிப்பிடத்தக்கது.