இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் அதற்கு ஆதரவை வழங்குவோம் என அக்கட்சி அறிவித்துள்ளது.
நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீர்க்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் கூறியது.
ஆகவே சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த முன்மொழிவுகளின் அடிப்படையில் தற்போதைய நெருக்கடியைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தயார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.















