இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிறுத்தப்பட்டுள்ளன என இராணுவம் அறிவித்துள்ளது.
பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு தனது படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
இலங்கை இராணுவ விசேட படையணியின் போர் ரைடர்ஸ் படையானது இலங்கை இராணுவத்தின் அனைத்து வீதித் தடைகளையும் உள்ளடக்கி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
மேலும், அதுருகிரிய, கொடகம மற்றும் ஹோமாகம பகுதிகளில் நடமாடும் ரோந்துப் பணிகளுக்காக கவச வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பின் பல வீதிகளில் இராணுவ வாகனங்கள் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.