உக்ரைனுக்கு மேலதிகமாக 40 பில்லியன் டொலர் உதவியை வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யாவின் மூன்று மாத காலப் படையெடுப்பை முறியடிக்க கிய்வ் உதவிக்கு அதிக நிதி தேவை என ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்ததை அடுத்து இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் உக்ரைன் சட்டமூலத்திற்கு ஆதரவாக 368 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் கிடைத்தன இலையில் நிரைவேற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த கோரிக்கையை விட 7 பில்லியன் டொலர் அதிகமாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.