ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையில் அல் ஜசீராவுக்கு செய்தி அளித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
51 வயதான ஷெரின் அபு அக்லா, இஸ்ரேலிய துருப்புக்களால் வேண்டுமென்றே சுடப்பட்டதாகவும் அவரது தயாரிப்பாளரும் சுடப்பட்டு காயமடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுட்டள்ளது,
துப்பாக்கிச் சூட்டின் போது பாலஸ்தீனிய ஆயுததாரிகளால் அவர்கள் சுடப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறினார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.