தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி இன்றைய தினம் திங்கட்கிழமை (16) மன்னாரை வந்தடைந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் வடக்கு கிழக்கில் குறித்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் 5 ஆவது நாளான இன்று திங்கட்கிழமை (16) குறித்த ஊர்தி மன்னாரை வந்தடைந்தது.
அத்தோடு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அஞ்சலியும் இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதோடு அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.