மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடைபெறும் பாகிஸ்தானிற்கான ஜி.எஸ்.பி. வரியை ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்த வேண்டுமென பிரித்தானிய ஊடகம் அழைப்பு விடுத்துள்ளது.
பாக்கிஸ்தானில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்ற நிலையில், ஏப்ரல் 2021 இல் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாகிஸ்தானிற்கான ஜி.எஸ்.பி. அந்தஸ்தை நிறுத்த வேண்டுமென்றும் அந்த ஊடகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் மீதான ஆணையகத்தின் செயலற்ற தன்மையை ஊடகம் வெளிப்படுத்தியுள்ளதோடு பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை நிறுத்துமாறும் கோரியுள்ளது.
2021 ஏப்ரலில், ஐரோப்பிய பாராளுமன்றம் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்களின் அடிப்படையில் அந்நாட்டுக்கான வர்த்தகத்தினை இடைநிறுத்துவது தொடர்பில் ஏகோபித்து வாக்களித்திருந்தது.
எனினும், ஐரோப்பிய ஒன்றிய ஆணையகம் இந்த விடயத்தில் மேலதிக நடவடிக்கைளை முன்னெடுக்கவில்லை. பாகிஸ்தானில் மேலும் முறைகேடுகள் தொடர்கின்றன. ஆகவே ஐரோப்பிய ஒன்றிய ஆணையகம் உடனடியாக இந்த விடயத்தில் தீர்மானத்தினை எடுக்க வேண்டியுள்ளது.
பாகிஸ்தானுக்கான வர்த்தக வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்த வேண்டும் என்ற கருப்பொருளின் பல்வேறுபட்ட அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானுக்கா வரிச்சலுகையானது எதிர்வரும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.