மார்ச் மாதம் விபத்துக்குள்ளான சீனாவின் ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிகாரிகளின் முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இதுவரை விமானத்தில் எந்த இயந்திர அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன.
போயிங் 737-800 ரக விமானம் தென் சீன நகரங்களான குன்மிங் மற்றும் குவாங்சூ இடையே பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 132 பயணிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இந்த விபத்து வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் என நம்பப்படுகிறது என ஏபிசி நியூஸ், தெரிவித்துள்ளது.