உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்குப் பிறகு, அந்த நாட்டில் 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தப் போரில் 4,062பேர் காயமடைந்தாகவும் உயிரிழந்துள்ளளோர் காயமடைந்தோரின் உண்மையான எண்ணிக்கை இதைவிட இன்னும் அதிகமாக இருக்கலாம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைனின் 31 இடங்களில் தாங்கள் நடத்திய தாக்குதலில் 270 ‘தேசியவாத’ படையினர் உயிரிழந்ததாகவும் அமெரிக்க பீரங்கிகள் உள்ளிட்ட 54 இராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
இதுவரை உக்ரைனின் 172 விமானங்கள், 125 ஹெலிகாப்டர்கள், 3,139 பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை தாங்கள் அழித்துள்ளதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தங்கள் நாட்டில் இதுவரை 28,300 ரஷ்யப் படையினர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது தவிர, போரில் 1,251 பீரங்கிகள், 3,043 கவச வாகனங்கள், 91 வான் பாதுகாப்பு தளவாடங்கள், 202 போர் விமானங்கள், 167 ஹெலிகொப்டர்கள், 2,137 லொரிகள், 441 ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் இராணுவ அதிகாரிகள் கூறினர்.