நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி சர்வதேச நாடுகள் சாதகமான முறையில் பதிலளித்திருக்கின்றன என்றும் குறிப்பாக இந்தியாவே துரிதமாக உதவிகளை வழங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நிதியுதவியே நாடு தொடர்ந்து இயங்குவதற்கு உறுதிசெய்தது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை, ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரமாட்டார்கள் என்றே கருதுவதாக கூறினார்.