எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் இன்மை போன்ற பிரச்சினைகளினால் மக்களுக்கு அத்தியாயமாக சேவையாற்றும் மட்டக்களப்பு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (புதன்கிழமை) முதல் தமது கடமைகளை சைக்கிளில் சென்று ஆற்றிவருகின்றனர்.
கடமை நேரத்திற்கு மேலதிக நேரம் பணி புரியும் இவர்களுக்குமான மேலதிக கொடுப்பனவையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளதுடன் இதனால் முழு நேரமும் மக்கள் நலனுக்காக சேவையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இவ் எரிபொருள் விலையேற்றத்தினால்.
எனினும் மக்களுக்கான சேவையை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் தமது கடமைகளுக்கு துவிச்சக்கர வண்டியில் செல்கின்றனர்.
கொரோனா தொற்று தற்போது நாட்டில் குறைவடைந்து வரும் அதே வேளை டெங்கு நோயின் தாக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.














