கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள உலக வர்த்தக மையத்தினை அண்மித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.