வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூன் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது அண்மையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் அது போதுமானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்துக் கட்டண உயர்வினால் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
இதன்காரணமாக பேருந்து தொழில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இத்தொழிலுக்கு டீசல் மானியம் வழங்கினால், பழைய கட்டணத்திலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.