2019 நவம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் ஆட்சிக்கு வந்தபோது, பீஜிங் மகிழ்ச்சியடைந்தது. சில வருடங்களுக்கு முன்னர், புதிய ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மஹிந்த, தனது நாட்டில் சீனச் செல்வாக்கில் புதிய யுகத்தை ஏற்படுத்துவதில் முக்கிய நகர்வுகளைச் செய்திருந்தார்.
பீஜிங்கின் கனவுத்திட்டமான பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியின் (பி.ஆர்.ஐ) ஒரு பகுதியாக கண்கவர் உட்கட்டமைப்புத்திட்டங்களைச் செயற்படுத்தியது.
இந்த முயற்சிகள் இலங்கையை இந்தியப் பெருங்கடலில் பீஜிங்கிற்கான மூலோபாய புறக்காவல் நிலையமாக மாற்றியுள்ளன. புவியியல் ரீதியாக, இலங்கை சீனாவிற்கு மலாக்கா ஜலசந்திக்கு அப்பால் உள்ள நீர்ப்பரப்பினை அணுகுவதற்கு சந்தர்ப்பத்தினை வழங்கியது.
ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் சீனாவின் வர்த்தகத்திற்கு இப்பகுதி முக்கியமானதாக கருதப்பட்டமையால் இது மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே மூச்சுறுத்திறணலுக்கான நிலைமையை ஏற்படுத்தியது.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ 2015இல் அதிகாரத்தை இழந்தவுடன், சீனாவுக்கு கடினமான காலம் ஏற்பட்டது. மேலும் பீஜிங் அதன் முன்னர் சலுகைகளை இழப்பதற்கு நேரிட்டது. 2019இல் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராஜபக்ஷ சகோதரர்கள் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தார்கள்.
அடுத்த ஆண்டு, பீஜிங் அவர்களுடன் தொடர்ந்து ஒத்துழைப்புக்களைச் செய்வதன் ஊடாக இந்தியப் பெருங்கடலில் அதன் தடத்தை விரிவுபடுத்த இலங்கை அனுமதிக்கும் என்று நினைத்தது.
இனி அப்படி இல்லை
ஆனால், அண்மைய நாட்களில் கொழும்பு வீதிகளில் மோதல்கள் வெடித்தன, உயிர்கள் கொலை செய்யப்பட்டன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்தார், அவரது சகோதரரை பதவி விலகுமாறு போரட்டங்கள் இன்னமும் தொடருகின்றன. இந்நிலையில் இலங்கை நிதியுதவிக்கான அணுகலைப் பெறுவதற்குப் போராடிக் கொண்டிருக்கின்றது.
எந்த நேரத்திலும் உரையாற்ற வேண்டும்
கொழும்பில் தொடரும் நெருக்கடியானது சீன வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது இந்தியாவில் பிரசன்னத்திற்கு பெரும் வாய்ப்புக்களைக் கொண்டிருக்கலாம் என்ற அச்சத்தினை ஏற்படுத்தியது.
மேலும் சீனாவின் உலகளாவிய உட்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டத்தின் எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றிய சிந்தனையையும் ஏற்படுத்தியது.
2019இல் ராஜபக்ஷக்கள் பதவியேற்பதற்கு முன்பே, நாடு முழுவதும் சீனாவின் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி பரவலான பிரசாரங்கள் இடம்பெற்றன.
எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த திட்டங்களை இலங்கையின் நீண்டகால கடன் பிரச்சினைக்கான எடுத்துக்காட்டுகளாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
ராஜபக்ஷவின் பூர்வீகத் தாயகமான அம்பாந்தோட்டையில் ஆடம்பரமான துறைமுகம் ஒன்றுக்கு 1.4 பில்லியன் டொலர்கள் சீனக் கடனாக வழங்கியுள்ளது. ஆனால் அக்கடன் ஆறு வருடங்களில் 300 மில்லியன் டொலர்களாக அதிகரித்ததோடு மேலும் சீனாவிடம் இருந்து 200 மில்லியன் டொலர்கள் கடன்களைப் பெறுவதற்கும் வழிவகுத்தது.
அதேநேரம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகிலுள்ள மத்தள விமான நிலையத்தை உருவாக்குவதற்கும் சீனாவின் கடன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 15 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான செலவில் மாநாட்டு மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டதோடு அதன்பயன்பாடு குறைவாகவே காணப்படுகின்றது.
இவ்விதமான கடன்கள் காரணமாக இலங்கை சொந்த மின்சார செலவுகளை கூட வழங்க முடியாத நிலைமையை அடைந்துள்ளது.
இவ்வாறிருக்கையில், சீனாவின் பேருபகாரமான உள்கட்டமைப்பு திட்டங்கள் ஏற்கனவே செலவுகளை அதிகரிக்கச் செய்து இலங்கையை ‘கடன் பொறி’க்குள் உட்தள்ளிவிட்டது. இதனால் தெற்காசியாவில் செழுமையான நாடான இலங்கையால் கடன்களை மீளச் செலுத்த முடியாது தடுமாறும் நிலைக்கு தள்ளிவிட்டது.
இந்நிலையில் கடன்களை மீளப்பெறும் விடயத்தில் சீனாவின் அணுகுமுறை மிகவும் மோசமாக்கியுள்ளது. நெருக்கடியில் இருக்கும் கொழும்புக்கு இதுவரையில் உதவிகளை வழங்கும் நிலைப்பாட்டில் பீஜிங் தெளிவாக இல்லை.
தனது வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்னர், பீஜிங்குடன் தனக்குள்ள கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்று இலங்கை பகிரங்கமாகவே கோரியிருந்தது.
இருப்பினும், சீனா தனது கனவுத்திட்டமான பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சித் திட்டத்தின் கீழான கடன்களை மாற்றியமைப்பதற்கு தயங்கி மௌனம் காத்து வருகின்றது. இதனால் இலங்கை உலகின் ஏனைய நாடுகளைப் போன்று சர்வதேச நாணய நிதியத்தினை தற்போது நாடியுள்ளது.
இதனால் பீஜிங்கின் கைகள் கட்டப்படும் நிலை உருவாகியுள்ளது. அதேநேரம் சீனாவின் முக்கிய நகரங்களில் கொரோனாவின் புதிய பரவல்களால் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் ‘பூச்சிய கொரோனா நிலை’ கொள்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பல வாரங்களாக, ஷாங்காய் கடுமையான பூட்டுதல் நிலைமைகளின் கீழ் உள்ளது, இது பொருளாதார இறங்குநிலைமையை சீனாவுக்கு ஏற்படுத்துகிறது. ஏப்ரல் மாதத்தில், சீனாவில் தொழில்துறை உற்பத்தி முந்தைய ஆண்டை விட 2.9சதவீதம் குறைந்துள்ளது. சில்லறை விற்பனை 11சதவீதம் குறைந்துள்ளது.
சாதாரண சீன குடிமக்களின் வாழ்க்கை மிகவும் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனா இலங்கை விடயத்தில் இந்தியாவுக்கு மூலோபாய நெகிழ்வுத்தன்மையை அளித்துள்ளது எனலாம்.
இதுவரை, புதுடில்லி கொழும்பிற்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர்கள் நிதி உதவியை வழங்கியுள்ளது. அத்துடன் 2 பில்லியன் டொலர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைத்துள்ளது.
இலங்கையின் நெருக்கடியின் போது, இந்தியாவின் உதவிகளை வழங்கும் செல்வாக்கு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்துள்ளது.
கொழும்பில் ஒரு மாணவர் எதிர்ப்பாளர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது, ‘இந்தியர்கள் ஜனாதிபதியிடம் தனது முதுகில் உள்ள ஆடைகளைக் கேட்டால், அவர் அவற்றைக் கொடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை விடயத்தில் சீனாவுடனான மோதலில் புதுடெல்லி அமோக வெற்றி பெற்றுள்ளது. உக்ரேனை மையமாகக் கொண்டு, பீஜிங் இலங்கையில் அதன் இருப்பு குறைந்து வருவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
எவ்வாறாயினும், கொழும்பில் நெருக்கடியான நிலைமை தொடர்ந்தால், அது இந்து சமுத்திரத்தில் சீனாவின் மூலோபாய மேலாதிக்கத்திற்கும் அதன் பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியின் எதிர்காலத்திற்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
-யே.பெனிற்லஸ்-