உயிரிழந்த ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவாக நடவடிக்கை எடுத்து நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
“ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.
இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன். சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்.” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா நேற்றையதினம் காணாமல் போயிருந்த நிலையில் இன்று 28 ஓடைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.