அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று மாலை குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் மொட்டு கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதை தடுக்கும் ஏற்பாட்டிற்கு பசில் ராஜபக்ஷவிற்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே ஆளுங்கட்சிக்குள் ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.