சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று(30) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் 90 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் நாளாந்தம் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளொன்றுக்கு ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் மற்றும் 600 முதல் 800 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.