பல்வேறு நாடுகளில் மிகவேகமாக பரவிவரும் குரங்கம்மை நோய், தற்போது மெக்ஸிகோ, அயர்லாந்து மற்றும் அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.
மெக்ஸிகோவில் மெக்சிகோ நகரில் உள்ள 50 வயதான ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அயர்லாந்தின் சுகாதார நிறுவனம் நாட்டிலேயே முதல் குரங்கம்மை நோய் தொற்றை பதிவுசெய்துள்ளது. தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றொருவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்க நாடாக அர்ஜென்டினா மாறியுள்ளது. இரண்டு நோயாளிகளுக்கும் ஸ்பெயினுக்கு பயணம் செய்த வரலாறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை நோய், இதுவரை சுமார் 20 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 தொற்றுகள் உள்ளன.
இந்த நோய் காய்ச்சல், தோல் புண்கள் மற்றும் கடுமையான தலைவலியை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும்.