கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபையின் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்ற நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி முதல் இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 16 சந்தேக நபர்களை இதுவரை கைது செய்துள்ளனர்.















