அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உடனடியாக விடுவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்த பணிப்புரை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களினால் குறித்த மருந்துகள் மற்றும் உபகரணங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவை நாட்டை வந்தடைந்து 12 நாட்கள் கடந்துள்ள போதும், அவற்றை கட்டுநாயக்கவில் இருந்து விடுவிப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையிலே, குறித்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உடனடியாக விடுவிக்குமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 03 நாட்களுக்குள் அனுப்பட்ட மருத்துவ பொருட்கள் 32 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கொழும்புக்கு எடுத்துச் செல்ல 12 நாட்கள் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.