சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், மூன்றாவது முறையாக அதிகாரத்தில் அமர்வதற்கு முயல்வதால், பெரிய வணிகங்கள் மீது அதிகாரங்களை குறைக்கும் வகையில், மூலதனத்திற்கான கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கடுமையான கொரோனா கொள்கைகள் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் அவரது நிலைப்பாட்டிற்கு மத்தியில் முதலீட்டாளர்கள் சீனப் பொருளாதாரம் குறித்து அவநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதால், சர்வதேச நிறுவனங்களால் சீனாவுக்கான நேரடி அந்நிய முதலீடு வீழ்ச்சியடைந்து வருவதால் இவ்வாறான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
‘மூலதனம் மற்றும் மூலதனப் பகிர்வு கோட்பாடுகளில் கொண்டுள்ள ஏகபோகம், இலாபம், உயர்ந்த விலை, தீங்கிழைக்கும் விளம்பரம் மற்றும் நியாயமற்ற போட்டி ஆகியவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்.
மூலதனத்தின் பயனுள்ள மேற்பார்வை சட்டத்தின்படி பலப்படுத்தப்பட வேண்டும். மூலதனத்தின் ஒழுங்கற்ற விரிவாக்கத்தைத் தடுக்க, சரியானதாக இல்லாத தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் கூடிய விரைவில் மேம்படுத்தப்பட வேண்டும்’ என்று மத்திய பொருளாதார வேலை மாநாட்டில் ஷி ஜி கூறினார்.
‘சில பங்குதாரர்கள் மற்றும் உண்மையான கட்டுப்பாட்டாளர்கள் நிதி நிறுவனங்களை சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி, உள் கட்டுப்பாடு, முக்கிய பங்குதாரர்களால் கையாளுதல், நிதி மோசடி மற்றும் தவறான முறையில் நிதியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் நிதி நிறுவனங்களை இயக்கி நிர்வகிக்கின்றனர்.
நான்காவதாக, அதிகாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையேயான கூட்டு மற்றும் ஊழல் பெருகியுள்ளது. சில நிதி நிறுவனங்களின் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கடமை தவறி, ஊழல் செய்து, தங்கள் சுயலாபத்தை வளப்படுத்திக் கொண்டு, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர்’ என்றார்.
இதேவேளை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தசாப்தத்திற்கு இருமுறை நடைபெறும் அதன் தேசிய காங்கிரஸ் தேர்தலை இந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நிறுவனங்கள் சீனாவில் தங்கள் வணிகங்களை நடத்துவதில் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன. பல சர்வதேச நிறுவனங்களின் கனவுகளை நசுக்க சதி செய்யும் ஷி ஜின்பிங்கின் கொள்கைகளால் பல அரசியல் மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் தீவிரமடைந்துள்ளன.