வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் வடக்கு மாகாணசபை பிரதம செயலக அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்பாக வடமாகாண ஆளுநரினால் விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயம், மீன்பிடி, உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம், சுற்றுலாத்துறை போன்றவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தரவு ரீதியான விளக்கங்கள் இதன்போது அளிக்கப்பட்டது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார், வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் , வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.வரதீஸ்வரன் , உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன், வடமாகாண நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள் முப்படை உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.