வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவிற்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
‘இலங்கையின் ஜனநாயக மற்றும் வளமான எதிர்காலத்தை பாதுகாக்குமாறு இலங்கை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.’
எனவே இதற்காக அமெரிக்கா எவ்வாறு இலங்கைக்கு உதவ முடியும் என்பது தொடர்பில் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது என ஜுலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, இலங்கையில் முதலீட்டை அதிகரித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை ஆதரிக்கும் தங்கள் உறுதிப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.