கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான சாட்சியங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் கோடா கோ கம மற்றும் மைனா கோ கம ஆர்பாட்டகாரர்கள் மீது மகிந்த ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த தாக்குதல் தொடர்பிலான சாட்சியங்கள் இன்று(2) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கோடா கோ கமவின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் குழுவினரால் இந்த சாட்சியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலுக்குள்ளான காணொளி சாட்சியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.