இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் அநுராதபுரத்தில் 13 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் பாலின சுகாதார சேவைகள் நிலையத்தின் வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கஹட்டகஸ்திகிலிய, தம்புத்தேகம, ஹொரவப்பொத்தானை, மத்திய நுவரகம் மற்றும் மதவாச்சி உள்ளிட்ட பகுதிகளிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாகவே எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் அநுராதபுரத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான முதலாவது நபர் பதிவாகியிருந்தார்.
அதன் பின்னர் குறித்த மாவட்டத்தில் மொத்தமாக எச்.ஐ.வி. 15 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது அதிகூடிய நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் தெரிவித்துள்ளார்.