நாளைய தினம்(வெள்ளிக்கிழமை) 10 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படவுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 1 முதல் கொழும்பு 15 வரை மாத்திரமே குறித்த எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாளைய தினம் 10,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் நிலையில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை எரிவாயு கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த கப்பல் வரும் பட்சத்தில் செவ்வாய்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.