21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்க சகல மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து சிவில் அமைப்புகளுக்கு எடுத்துரைத்த நீதி அமைச்சர், புதிய அரசியலமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
அதற்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்த 21 ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அத்தோடு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீனத்தன்மை குறைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் மீண்டும் பலப்படுத்த வேண்டும் என கூறினார்.
குறிப்பாக 21 ஆவது திருத்தம் ஊடாக தேசிய சபை மற்றும் கணக்காளர் நாயகம் ஆகிய ஆணைக்குழுக்கள் மீள ஸ்தாபிக்க வேண்டும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.