நாட்டில் முறையற்ற எரிபொருள் விநியோகம் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வினைத்திறனற்ற விநியோக வேலைத்திட்டம் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடிய மண்ணெண்ணெய் தமது கையிருப்பில் இல்லை என்றும் ஆனந்த பாலித தெரிவித்தார்.
கையிருப்பில் உள்ள மண்ணெண்ணெய்யை விநியோகிக்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆனந்த பாலித குற்றம் சுமத்தினார்.
மேலும் லஞ்சம் மற்றும் கமிஷன் அடிப்படையில் எரிபொருள் இருப்புக்களை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்குகின்றது என அவர் குற்றம் சாட்டினார்.