அனைவருக்கும் மூன்று வேளை உணவை வழங்கும் திட்டம் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு பெறுவதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் நிலை காணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே குறித்த காலகட்டத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம் என்றும் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை நாட்டு மக்களின் நலனுக்காக அரசாங்கம் எடுக்கும் நலத்திட்டங்களுக்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.