கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 40 வருடங்கள் வரை வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களை கவரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்திற்கு பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடு ஒரு பில்லியன் டொலர்கள் என்பதுடன், இலங்கையில் ஒரு திட்டத்திற்காக பெறப்பட்ட அதிகூடிய வெளிநாட்டு முதலீடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.