தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் பங்குகள் நாளை (08) முதல் விநியோகிக்க உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி வழமை போன்று நாளை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 5000 மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு 3500 மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும்போதே எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.