அனைத்துப் பொருட்களின் விலைகளும் 200 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அவர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
பொருட்களின் மீதான கட்டுப்பாட்டு விலைகளை விதித்து கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் வர்த்தமானி ஜனாதிபதியால் இரத்துச் செய்யப்பட்டமையே இதற்கு காரணம் என்றார்.
அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முடிவுகளே தற்போதைய பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டினார்.
இதேவேளை ராஜபக்ஷக்களுக்கு ஆதரவாக கைகளை உயர்த்திய அதே நபர்களே இன்று அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டினார்.