மரியுபோலைப் பாதுகாக்கும்போது உயிரிழந்த சில உக்ரேனியப் போராளிகளின் உடல்கள் கியிவ் வந்தடைந்ததாக இராணுவ வீரர்களின் குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
மரியுபோலில் பிடிபட்ட 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைகளால் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வீரர்கள், விசாரணைக்காக ரஷ்யாவிற்கு மாற்றப்பட்டனர்.
ஒரு மாத கால முற்றுகை மற்றும் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் ரஷ்யாவால் தென்கிழக்கு துறைமுகமான மரியுபோல் கைப்பற்றப்பட்டது.
இதன்போது குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உக்ரேனிய அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.